You don't have javascript enabled in you browser. The website does not work properly without javascript. Please enable javascrip on you browser.


இணையச் சேவையை பாவிப்பதற்கான அறிவுறுத்தல்கள்


சிறையிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்காக வருகைதரும் பார்வையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைப்பதற்கும், மற்றும் சிறைச்சாலைகளிலும் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் சிறையிலுள்ள கைதிகளைச் சந்திப்பதற்கு சிறைச்சாலைக்கு வருகைதரும் பார்வையாளர்களுக்கு முன்னரே நேரத்தை ஒதுக்கிக்கொண்டு வருகைதருவதற்கான சலுகையை வழங்குவதற்கு மற்றும் சிறைச்சாலைக்கு வருகைதராமல் காணொலி தொழில்நுட்பத்தின் மூலம் கைதியைப் பார்வையிடுவதற்கான சலுகை வழங்குவதற்காக இவ் வலைப்பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் கைதிகளை சந்திப்பதற்கு வருகைதரும் பார்வையாளர்களின் நெரிசலினைக் குறைப்பதும் அவர்களுக்கு சுலபமான நேரமொன்றினை ஒதுக்கிக்கொண்டு வருகைதருவதால் அவர்களின் நேரத்தினை மீதப்படுத்திக் கொடுப்பதும், சிறைச்சாலை சுற்றுச்சூழலில் தங்கியிருப்பதால் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.இங்கு பார்வையாளர்களுக்கு வலைப் பயன்பாட்டிற்குள் நுழைந்து தங்களது மற்றும் கைதியின் தகவல்களையும், சந்திப்பதற்கு வருகைதரும் திகதி மற்றும் நேரம் ஏனைய தகவல்களையும் உட்படுத்துவதால் நேரமொன்றினை ஒதுக்கிக்கொண்டதன் பின் அக் குறித்த நேரத்திற்கு சிறைச்சாலைக்கு வருகை தந்து தாமதமின்றி கைதியைச் சந்திப்பதற்கு இயலுமானதாக இருக்கும்.

Physical visit (சிறைச்சாலைகள் நிறுவனத்திற்கு வருகைதந்து பார்வையிடல்)

சிறைச்சாலைகள் நிறுவனத்திற்கு வருகைதந்து பார்வையிடுவதற்கான தற்போது உள்ள வழிமுறையாவது கைதியை பார்வையிடுவதற்காக காலையில் சிறைச்சாலைக்கு வருகைதந்து தமது முறை வரும்வரை காத்திருந்து தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி சோதனைக்குட்படுத்தப்பட்ட பின் கைதியைப் பார்ப்பதற்கு வாய்ப்பை வழங்குவதாகும். இதன் போது பார்வையாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு அசௌகரியங்களை குறைப்பதற்காக E-visit அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Please mind that you are not allowed to bring mobile phones into the prison

Online visit (காணொலி தொழில்நுட்பத்தின் மூலம் பார்வையிடல்)

காணொலி தொழிநுட்பத்தினூடாக கைதிகளைப் பார்வையிடும் போது சிறைச்சாலைக்கு வருகை தருவது நடைபெறமாட்டாது என்பதோடு இதன் போது எங்களுக்கு பார்வையாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அசௌகரியம் நிலவுகிறது.இதனை தவிர்ப்பதற்காக காணொலி தொழில்நுட்பத்தில் கைதிகளைப் பார்வையிடுவதற்காக வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக முதலில் பார்வையாளர்களின் அடையாளத்தினை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இதற்காக சிறைச்சாலைகள் நிறுவனத்திற்கு வந்து பார்வையிட வருகை தரும் பார்வையாளரின் தகவல்களும், கைதியின் தகவல்களும் பார்வையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர்களின் தேசிய அடையாள அட்டை அல்லது அடையாளத்தை தெரிந்து கொள்ளக்கூடிய ஏனைய அடையாள அட்டையொன்றின் நிழற்படப்பிரதியொன்றை எங்களிடம் தந்து அமைப்பிற்குள் பதிவு செய்ய வேண்டும்.இதனை ஒரு தடவை மாத்திரம் செய்ய வேண்டுமென்பதோடு இதன் போது உங்களுக்கு தொடர் இலக்கமொன்று(sequential number) வழங்கப்படும்.அதன் பிறகு காணொலி தொழில்நுட்பத்தின் ஊடாக கைதிகளை பார்வையிடுவதற்காக உங்களுக்கு வழங்கப்பட்ட தொடரிலக்கத்தை சேர்த்து திகதி மற்றும் நேரத்தினை சேர்ப்பதன் மூலம் நேரத்தினை ஒதுங்கிக்கொள்ள முடியும்.அதன் பின் தொடர்புபட்ட சிறைச்சாலைகள் நிறுவனத்தில் உத்தியோகத்தர் ஒருவர் அதனை உறுதிப்படுத்திய பின் உங்களுக்கு கைதியை காணொலி தொழில்நுட்பத்தின் ஊடாக பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டும்.இதன் போது ஒரு கைதிக்காக பதிவு செய்யும் அனுமதி கிட்டுவதும் அவர்களின் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு மட்டுமே என்பதோடு உங்களுக்கு கிடைக்கும் தொடரிலக்கத்தை வேறொருவருக்கு பெற்றுக் கொடுத்தல் எங்கள் நடைமுறை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் கைதியின் காணொலி தொழில்நுட்பம் ஊடாக பார்ப்பதற்கான வசதிகள் குறுகிய காலத்திற்கு இடைநீக்கம் செய்ய வேண்டி ஏற்படும்.காணொலி தொழில்நுட்பத்தின் ஊடாக பார்வையிடும் போது பதிவு செய்யப்பட்ட நபர் காணொலி அழைப்பில் தோன்றுதல் கட்டாயமானது என்பதோடு கைதியின் ஒருமித்தலின் கீழ் அப்பதிவுநபருடன் வேண்டிய நபர்களுக்கு காணொலி அழைப்பில் சம்பந்தப்பட முடியும்.

இதன் போது பாதுகாப்பு காரணமாக இவ் அழைப்பு சிறைச்சாலைகள் உத்தியோகத்தர் ஒருவரால் கண்காணிப்பு (surveillance) செய்தல் நடைபெறுவதோடு, பொருத்தமற்ற அல்லது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பேச்சுவார்த்தைகள் ஏற்பட்டால் அழைப்பினை துண்டித்தல் மற்றும் கைதியின் காணொலி அழைப்பினைப் பெற்றுக் கொள்ளும் வசதியானது தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படும்.

இக் காணொலி தொழில்நுட்பத்தினூடாக பார்வையாளர்களைக் காணும் வசதி கைதிக்கு கிடைப்பது நன்னடத்தையுடன் காலங்கடத்தும் கைதிகளுக்கு மட்டுமேயாகும். எவரேனுமொருவரால் ஏதேனுமொரு ஒழுக்கத்திற்கு புறம்பான அலுவலொன்று நிகழுமாயின் .

கைதியின் காணொலி தொழில்நுட்பம் ஊடாக பார்வையாளர்களைப் பார்ப்பதற்கான வசதி தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.

வெளிநாட்டவர்களுக்கென மேலுள்ள வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக தொடர்புடைய தூதரகத்தினூடாக வேண்டுகோள் விடுத்து தகவல்களை உறுதிப்படுத்திய பின்னர் மட்டுமே சந்தர்ப்பம் கிட்டும்.இதன் போது பார்வையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியுமான ஆவணங்களை சமர்ப்பித்தல் கட்டாயமானது.

அனைத்து தகவல்களையும் ஆங்கில மொழியில் பதிவு செய்யப்பட வேண்டும்.நட்சத்திரக் குறியீடுகள் (*) வரையுள்ள அனைத்து தகவல்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

  • Prison Institute
    • இத் தகவல் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டிய தகவலாகும். பார்ப்பதற்கு எதிர்பார்க்கும் கைதி தற்போது இருக்கும் சிறைச்சாலை நிறுவனத்தை இதிலிருந்து தெரிவு செய்ய வேண்டும்.இதன் போது பதிவாகுவது இச் சேவை வசதி வழங்கப்பட்டுள்ள சிறைச்சாலை நிறுவனம் மட்டுமே.இந் நிறுவன கைதிகளைப் பொறுத்து பெண்கள், ஆண்கள் என பிரிக்கப்பட்டுள்ளது.

  • Visit Type
    • இத்தரவு கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். கைதியைப் பார்வையிட எதிர்பார்க்கும் வழிமுறை இங்கு கொடுக்க வேண்டும். சிறைச்சாலைகள் நிறுவனத்திற்கு வருகைதந்து பார்வையிட எதிர்பார்ப்பதாயின் ‘physical visit' என்பதையும் காணொலி தொழிநுட்பமூடாக பார்வையிட எதிர்பார்ப்பதாயின்’online visit’என்பதையும் தெரிவு செய்து கொடுக்க வேண்டும்.’online visit' என்பதை தெரிவு செய்து முன்னே செல்வதற்காக உங்களுக்கு சிறைச்சாலைகள் நிறுவனத்தில் இச் சேவைக்காக பதிவு செய்வதன் மூலம் பெற்றுக் கொண்ட தொடரிலக்கமொன்று(sequential number) இருத்தல் கட்டாயமானது.இது தொடர்பான மேலதிக தகவல்கள் மேலே பார்வையிடுவதற்கான வழிமுறைகள் (visit types) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

      இத் தெரிவு செய்வதற்காகவுள்ள வழிமுறைகளில் இரண்டில் ஒன்று அல்லது செயலற்று (disable) இருந்தால் இதிலிருந்து வெளிப்படுவது இச் சலுகை தொடர்புபட்ட நிறுவனத்தினால் வழங்கப்படாத அல்லது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதை ஆகும்.

  • Visitting Date
    • இத் தரவினைப் பதிவு செய்வது கட்டாயமானது. இதன் போது கைதியைப் பார்வையிட எதிர்பார்க்கும் திகதியைத் தெரிவு செய்ய வேண்டும். அதற்கென தொடர்புபட்ட பெட்டியை க்ளிக் செய்வதினால் கிடைக்கும் நாட்காட்டியினால் திகதியைத் தெரிவு செய்ய வேண்டும். இதன் போது திகதியைத் தேர்ந்தெடுக்கும் அருகிலுள்ள திகதியாவது நீங்கள் தரவினைப் பதிவு செய்யும் தினத்திலிருந்து முன்னோக்கிய தினம் ஒன்றிற்குப் பின்னர் வரும் தினம் மற்றும் தேர்ந்தெடுக்கக் கூடிய அதிகபட்ச திகதியாவது குறைந்த தினத்திலிருந்து முன்னோக்கிய தினம் நான்குக்குப் பின்னர் இருக்கும் தினமாகும். ஞாயிறு தினங்களில் கைதிகளைப் பார்வையிடுதல் மேற்கொள்ளப்படுவதில்லையாகையால் ஞாயிறு தினத்தைத் தெரிவு செய்ய முடியாது.

  • Visiting Time
    • இத் தரவினைப் பதிவு செய்வது கட்டாயமானது. இதன் போது கைதியைப் பார்வையிட எதிர்பார்க்கும் திகதியில் குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு தடவை பார்வையிடுவதற்கான காலம் 15 நிமிடத்திற்கு கிட்டிய காலமாகும். மு.ப 8:30 இலிருந்து மு.ப 11:30 வரையும் பி.ப 1:30 இலிருந்து பி.ப 4:30 வரையுமான காலப்பகுதியைத் தெரிவு செய்ய முடியும். ஏதாவது நேரமொன்றினைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்பதைக் காட்டுமானால்(Disabled times) அது அக் காலகட்டத்தில் தொடர்புடைய சிறைச்சாலை நிறுவனத்தில் இருக்கும் வசதியில் ஒரு தடவைக்கு ஒதுக்கக்கூடிய அதிகபட்ச பார்வையிடும் அறை அளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதாகும். அப்படியானால் உங்களுக்கு இலகு வேறோரு நேரத்தினைத் தெரிவு செய்ய வேண்டி ஏற்படும்.இந்ந நேரம் இருப்பது இலங்கை நிலையான நேரத்தில் ஆகும்.(UTC +5:30-Sri Jayawardenapura kotte).

  • Number of Additional Visitors
    • இத் தரவினைப் பதிவு செய்வது கட்டாயமானது. இதன் போது கைதியைப் பார்வையிட வருகை தரும் மேலதிக பார்வையாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட வேண்டும். அதிகபட்ச வருகை தர முடியுமான நபர்கள் மூவராவர். இது பொருத்தமாக இருப்பது சிறைச்சாலைகள் நிறுவனத்திற்கு வருகை தந்து பார்வையிடும் போது ஆகும். காணொலி தொழிநுட்பத்தில் பார்வையிடலை மேற்கொள்ளும் போது கைதியின் விரும்பின் பேரில் முடியுமான போதியளவு எண்ணிக்கையானோர் அழைப்புடன் சம்பந்தப்படலாம்.

  • Your Sequential Number
    • தொடரிலக்கம்( Your sequential number) அத்தியவசியப்படுவது காணொலி தொழிநுட்பத்தில்(Online visit) கைதியைப் பார்வையிடும் போது மட்டுமேயாகும். இத் தொடரிலக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கைதி இருக்கும் சிறைச்சாலை நிறுவனத்திலேயே நீங்கள் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பான மேலதிக தகவல்கள் ‘காணொலி தொழில்நுட்பத்தில் பார்வையிடுவதற்கான பதிவு' வின் கீழ் பெற்றுக் கொள்ள முடியும்.நீங்கள் visit type இன் கீழ் Online visit என்பதை தெரிவு செய்தால் இத் தரவு கட்டாயமாக சேர்க்க வேண்டும். தொடரிலக்கம் ஆங்கில எழுத்து, சுழிக்கோடுகள் மற்றும் இலக்கங்களைக் கொண்டுள்ளது.(உதா:-ABC/M/12345) இவ் இலக்கம் உங்களுக்கு கிடைப்பது சிறைச்சாலைகள் திணைக்களத்தில் Online visit க்காக பதிவு செய்வதன் பின்னராகும். ஒரு கைதிக்கு குடும்பத்தில் ஒருவருக்கு மாத்திரம் பதிவு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஒரு தடவை மாத்திரம் பதிவு செய்து இலக்கமொன்றினைப் பெற்றுக் கொண்டதன் பின் அவ்விலக்கத்தைப் பயன்படுத்தி கைதி சிறைச்சாலையில் இருக்கும் காலம் பூராகவும் காணொலி தொழிநுட்பம் மூலம் பார்வையிடுவதற்காக இவ்வமைப்பு மூலம் வேண்டுகோள் விடுக்கலாம்.ஏதாவது சந்தர்ப்பத்தில் கைதி காணொலி தொழிநுட்ப வசதி இல்லாத சிறைச்சாலையொன்றுக்கு மாற்றம் செய்தால் இச் சேவை அக் கைதிக்கு கிட்டாது.

  • Visitors’ Full Name
    • இது கட்டாயமாக சேர்க்க வேண்டிய தரவாகும். கைதியைப் பார்வையிட வருகை தரும் உறவினரின் முழுப்பெயர் இங்கு குறிப்பிடப்பட வேண்டும் (தேசிய அடையாள அட்டையில் இருப்பதைப் போன்று).

  • Visitors’ Address
    • இது கட்டாயமாக சேர்க்க வேண்டிய தரவொன்றாகும். கைதியைப் பார்வையிட வருகை தரும் உறவினர் வசிக்கும் இடத்தில் முகவரி இங்கு குறிப்பிடப்பட வேண்டும். உங்கள் கைதியைப் பார்ப்பதற்கான வேண்டுகோள்கள் சம்பந்தமான ஏதாவது அறிவிப்பு போன்றவற்றைச் செய்ய இது அத்தியாவசியமானது.

  • Visitors’ Gender
    • இது கட்டாயமாக சேர்க்க வேண்டிய தரவொன்றாகும். கைதியைப் பார்வையிட வருகை தரும் நபரின் ஆண், பெண் அடையாளத்தை இங்கு குறிப்பிட வேண்டும்.

  • Your Relation to the Prisoner
    • இது கட்டாயமாக சேர்க்க வேண்டிய தரவாகும். கைதியைப் பார்வையிட வருகை தரும் நபருக்கு கைதியுடன் இருக்கும் உறவை இங்கு குறிப்பிட வேண்டும்.

      உதா:- கைதி கணவராயின் பார்வையிட வருகை தருபவர் மனைவி என்றால் இங்கு தெரிவு செய்யப்பட வேண்டியது மனைவி (wife) என்றாகும்.

  • E-Mail
    • இது கட்டாயமாக சேர்க்க வேண்டிய தரவொன்று இல்லையாகையால் இத் தரவினை சேர்த்தல் உங்களுக்கு வசதியானது கைதியைப் பார்வையிட வருகைதரும் நபரின் மின்னஞ்சல் முகவரி இங்கு சேர்க்கப்பட வேண்டும்.

  • Mobile Number
    • இது கட்டாயமாக சேர்க்க வேண்டிய தரவொன்று இல்லையாயினும் இத் தரவினை உட்சேர்த்து வைத்தல் உங்களுக்கு வசதியானது. கைதியைப் பார்வையிட வருகை தரும் நபரின் தொலைபேசி இலக்கம் இங்கு சேர்த்தல் வேண்டும். உங்கள் பார்வையிடல் கோரிக்கைகள் சம்பந்தமான குறிப்புக்கள், தெரியப்படுத்தல்கள் மற்றும் அமைப்பிற்குள் பிரவேசிப்பதற்காக உங்களுக்கு கிடைக்கும் தற்காலிக டோக்கன் இலக்கம் (Token Number) ஏனைய முக்கிய தகவல்கள் இத் தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

      தொலைபேசி இலக்கத்தைச் சேர்க்கும் போது இலக்கங்களுக்கிடையில் இடைவெளிகள் இருக்கக் கூடாது. தொலைபேசி இலக்கத்தில் இலக்கத்தைத் தவிர ஏனைய எழுத்துக்கள் இருக்கக் கூடாது.நாட்டுக் குறியீடு (Country code) உடன் சேர்க்கும் போது+ புள்ளிகள் ஒதுக்கப்பட வேண்டும்.( உதா:-0712345678 மற்றும் 94712345678 செல்லுபடியாவதோடு +94712345678 செல்லுபடியாகாது.

      வெளிநாட்டு தொலைபேசி இலக்கத்தைச் சேர்க்கும் போது நாட்டின் குறியீட்டு இலக்கம் (Country code) இருத்தல் கட்டாயமானது. இத் தரவு சேர்த்ததன் பின்னர் சரியானதா என்பதை மீண்டும் ஒரு முறை ஆராயுங்கள்.

      When entering a foreign number, the country code is compulsory and be assured of accuracy.

  • Identity Proof
    • இத்தரவினைச் சேர்ப்பது கட்டாயமானது. இங்கு உங்களின் அடையாளத்தை முன்வைக்கக் கூடிய ஊடகத்தைத் தெரிவு செய்ய வேண்டும். தேசிய அடையாள அட்டை, வெளிநாட்டுப் பிரயாண கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை தெரிவு செய்ய முடியும். நீங்கள் கைதியைச் சந்திப்பதற்காக சிறைச்சாலைக்கு வருகை தரும் போது இங்கு தெரிவு செய்த அடையாள அட்டையை கொண்டுவருதல் கட்டாயமானது. இதன் மூலம் கைதியைப் பார்வையிட்டவர் நீர் என் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

  • Selected ID Number
    • இத் தரவினைச் சேர்ப்பது கட்டாயமானது. இங்கு நீங்கள் Identity proof க்காக தெரிவு செய்த அடையாள அட்டையின் ஊடகத்தின் இலக்கம் மட்டும் சேர்க்கப்பட வேண்டும். நீங்கள் கைதியைப் பார்வையிட வருகை தரும் போது கொண்டுவரும் அடையாள அட்டை மற்றும் அதன் இலக்கத்தைப் பரீட்சித்து உங்கள் அடையாளம் உறுதிப்படுத்திக் கொள்ளப்படும். அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் உங்களுக்கு இவ்வமைப்பினூடாக நேரமொன்றினை ஒதுக்கிக்கொண்டு தாமதமின்றி கைதியைப் பார்வையிடும் வசதியைப் பெற்றுக்கொள்ள முடியாது.

  • Prisoner Name
    • இது கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டிய தரவாகும். கைதியின் சரியான முழுப் பெயர் இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.

  • Other Names to Identify
    • இத் தரவு கட்டாயமானதல்ல. இதன் போது கைதியை அறிமுகப்படுத்துவதற்கு வேறு பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் அவை இங்கு காற்புள்ளி (,) இனால் ஒதுக்கி சேர்க்க வேண்டும்.

  • Prisoners’ Gender
    • This is compulsory data. The gender of the prisoner must be entered.

  • Prisoner Number
    • கைதி சிறையிலடைக்கப்பட்டிருந்து கைதிக்கு கொடுக்கும் சிறை இலக்கம் இங்கு சேர்க்கப்பட வேண்டும். இத் தரவு சேர்க்கப்படல் கட்டாயமானதல்ல ஆயினும் சிறை இலக்கமொன்று சேர்க்கப்பட்டிருந்தால் எங்களுக்கு கைதியைக் கண்டுபிடித்தல் இலகுவானது. இதனால் கைதி தொடர்புபட்ட சிறைச்சாலையில் தற்போது இருக்கிறாரா அல்லது வேறு சிறைச்சாலையொன்றுக்கு சிறைமாற்றமாகி உள்ளாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். ஆகையால் நீங்கள் கைதியின் சரியான சிறை இலக்கத்தை அறிந்திருந்தால் அதனை இங்கு சேர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • Prisoner Category
    • இத் தரவினைச் சேர்ப்பது கட்டாயமானது. இங்கு கைதி சட்டத்தினால் குற்றவாளியாகி சிறையிடப்பட்டு இருப்பவரா (Convicted) இன்னும் சட்டத்தினால் குற்றவாளியாக இல்லாமல் சந்தேகத்தின் பேரில் அல்லது தற்போது நிலுவையில் உள்ள வழக்கினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதியொருவரா(Unconvicted) என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

  • Court
    • இத் தரவு கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டியதல்ல. கைதி குற்றவாளியாக கட்டளை அளித்த நீதிமன்றம் அல்லது தற்போது வழக்கு பரிசீலனையிலுள்ள நீதிமன்றம் இங்கு தெரிவு செய்ய வேண்டும்.

காணொலி தொழிநுட்பத்தில் கைதிகளைப் பார்வையிடுவதற்காக இத் தகவல்கள் அமைப்பிற்கு முன்னர் பதிவாக வேண்டும். இதற்காக கைதி தற்போது இருக்கும் சிறைச்சாலைக்கு (காணொலி தொழில்நுட்ப வசதியுடன்) சென்று பதிவாக வேண்டும்.

இங்கு உங்கள் தேசிய அடையாள அட்டையின், செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தின் அல்லது செல்லுபடியாகும் வெளிநாட்டுப் பிரயாண அனுமதிப்பத்திரத்தின் நிழற்படப் பிரதியொன்றினை சிறைச்சாலைக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

சிறைச்சாலையினால் பெற்றுத்தரும் தகவற் படிவத்தை நிரப்பி அதன் பின்னர் அதனை சிறைச்சாலைகள் அத்தியட்சகர் அனுமதியளித்ததன் பின் உங்களுக்கு சிறைச்சாலையினால் தொடரிலக்கமொன்று(Sequential Number) கொடுக்கப்படும்.

இவ்விலக்கத்தை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதோடு வெளி நபரின் கைக்கு கிடைப்பது தடுக்கப்பட்ட வேண்டும். இதன் பிறகு இச் சேவையினூடாக காணொலி தொழிநுட்பத்தில் தொடர்புபட்ட கைதியைப் பார்வையிடுவதற்காக வேண்டுகோள் விடுக்கும் அனைத்து சந்தர்ப்பத்திலும் இவ்விலக்கம் சேர்க்கப்பட வேண்டும்.

ஒரு கைதிக்காக பதிவாகும் சந்தர்ப்பம் இருப்பது குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே. நீங்கள் சமர்ப்பிக்கும் தகவல்கள் வெளி நபர்களின் கைகளுக்கு கிடைக்காது என்று நாங்கள் உத்தரவாதமளிக்கிறோம்.

பதிவினை மாற்றுவதற்கு அல்லது நீக்குவதற்கு அவசியமேற்பட்டால் அதற்கு காரணத்தை முன்வைத்து சிறைச்சாலைக்கு வேண்டுகோள் விடுத்து பதிவினை மாற்றிக் கொள்ளலாம்.

இவ்வமைப்பினூடாக கைதியைப் பார்வையிடுவதற்காக Physical visit அல்லது Online visit எனும் வழிமுறைகளில் எவ் வழிமுறையிலாவது அல்லது வெற்றிகரமான நேரமொன்றினை ஒதுக்கிக்கொண்டதன் பின்னர் உங்களுக்கு டோக்கன் இலக்கமொன்று கிடைக்கும். இவ்விலக்கம், தரவு சேர்த்தல் வெற்றிகரமாகிய பின் அனுப்பப்படும் இணையப் பக்கத்தில் மேல் இடது மூலையில் நீல நிறத்தில் காட்டப்படுவதோடு நீங்கள் தரவினைச் சேர்க்கும் போது சரியான மின்னஞ்சல் முகவரியொன்று அல்லது தொலைபேசி இலக்கமொன்று கொடுத்தால் மின்னஞ்சல் ஊடாக அல்லது குறுஞ்செய்தியூடாக இலக்கம் உங்களுக்கு கிடைக்கும்.

இவ் டோக்கன் இலக்கம், உங்கள் ஒதுக்கிக்கொண்ட நேரத்தில் கிடைக்கும் தகவல்கள் (Visiting Details) மற்றும் உங்கள் பார்வையிடல் வேண்டுகோள் அனுமதிக்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா( Booking status) என்பதை ஏனைய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் வண்ணம் அமைப்பிற்குள் நுழைவதற்கு கொடுக்கப்பட்டுள்ள கணக்கின் கடவுச்சொல்லாக பயன்பாட்டில் உள்ளது.காணொலி தொழிநுட்பத்தில் பார்வையிடல் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் காணொலி அழைப்பினைப் பெற்றுக் கொள்வதற்கு உங்களுக்கு கொடுக்கப்படும் இணைப்பினை(Link) பெற்றுக் கொள்ள முடிவது அமைப்பிற்குள் நுழைவதனூடாகவாகும்.

அத்துடன் உங்கள் கைதியைப் பார்வையிடுவதற்கான வேண்டுகோளினை சிறைச்சாலையில் கண்டுபிடித்துக்கொள்வதற்காக பயன்படுத்துவது இவ்விலக்கத்தையாகும். அதனால் இவ்விலக்கம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளல் மற்றும் பாதுகாப்பாக வைத்திருத்தல் உங்கள் பொறுப்பாகும். உங்கள் டோக்கன் இலக்கம் ஆங்கில பெரிய எழுத்துக்கள் மற்றும் இலக்கங்களினாலான எட்டு எழுத்து இலக்கமொன்றாகும்.(உதா:-5F98FE4A).

Please mind that you are not allowed to bring mobile phones into the prison. Therefore, you must remember the token number or should write it down on a peace of paper and bring it to the prison.

அமைப்பினுள் பிழையான செய்திகள் (Error Messages) சிவப்பு நிறத்தில் திரையின் இடது மேல் மூலையில் சேர்க்க முடியாத தரவு சம்பந்தமாக அல்லது பிழையான தரவு சம்பந்தமாக பிழையான செய்தித் தரவுகள் சேர்க்கும் படிவம் மேலே மற்றும் தொடர்புபட்ட தரவு சேர்க்கும் பெட்டியின் அருகில் காட்டப்பட்டுள்ளது. அத்துடன் தரவு சேர்த்தல் வெற்றிகரமானதா எனும் ஏனைய வெற்றிகரமான செய்திகள் (Success Messages) திரையில் இடது மேல் மூலையில் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

பிழையான தரவுகள் சேர்த்திருப்பின் தரவு வெற்றிகரமான அமைப்பில் குறிப்பிடப்பட மாட்டாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் நேரமொன்றினை ஒதுக்கிக் கொள்வதற்காக அனுப்பும் கோரிக்கை எங்களுக்கு கிடைக்கப்பெற மாட்டாது. அதனால் அமைப்பில் காட்டப்படும் பிழையான செய்திகள் தொடர்பாக கவனத்திற் கொள்க.

தகவல்களைப் பார்ப்பதற்காக அமைப்பிற்குள் நுழைவதற்கு வலைப்பக்கத்தில் வலது மேல் மூலையில் இருக்கும் Login என்பதை கிளிக் செய்யுங்கள். அதன் பிறகு உங்களை அமைப்பிற்குள் சேர்க்கும் லொகின் பக்கத்திற்கு கொண்டு செல்லும். அங்கு`For Visitors’ என்பதின் கீழ் இருக்கும் உள்ளீட்டு பெட்டியில் (Input Box) உங்கள் டோக்கன் இலக்கத்தைச் சேர்த்து Login பொத்தானை அழுத்துங்கள். உங்கள் டோக்கன் இலக்கம் சரியான மற்றும் செல்லுபடியான இலக்கமொன்றானால் உங்களை பார்வையிடும் தகவல்கள் (Visit Details) பக்கத்திற்கு கொண்டு செல்லும்.

பார்வையிடும் தகவல்கள் (Visit Details) பக்கத்திற்கு நுழைவதற்கான வாய்ப்பு இருப்பது உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டோக்கன் இலக்கத்தைப் பயன்படுத்தி அமைப்பிற்குள் நுழைந்ததன் பின்னராகும். அத்துடன் வெற்றிகரமான தரவு சேர்த்துக்கப்பட்டு பார்வையிடுவதற்கான கோரிக்கை அமைப்பிற்கு அனுப்பிய முதல் சந்தர்ப்பத்திலேயே உங்களை அனுப்புவது இப் பக்கத்திற்காகவாகும்.

இப் பக்கத்தில் நீங்கள் சேர்த்த தரவு மற்றும் டோக்கன் இலக்கம் தோன்றும். அதைத் தவிர நேரத்தை ஒதுக்கிக்கொள்ளல் சம்பந்தமான குறிப்பும் (Booking status) காட்டப்பட்டுள்ளது.( இது தொடர்பான மேலதிக தகவல்கள் ‘நேரம் ஒதுக்கிக்கொள்ளல் சம்பந்தமான குறிப்பு’ இன் கீழ் காட்டப்பட்டுள்ளது).

பக்கத்தில் கீழ்வருமாறு My messages & Notifications இன் கீழ் உங்களுக்கு அனுப்பும் செய்திகள் தோன்றும் இச் செய்தி நீங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தால் ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு கிடைத்திருக்க வேண்டும்.

அத்துடன் My Details பெட்டியில் மேலே Edit Details பொத்தானை அழுத்துவதால் நீங்கள் கொடுத்திருக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தை மாற்ற முடியும்.

உங்களுக்கு இந்நேரத்தை மாற்றிக் கொள்வதற்கு அனுப்பிய கோரிக்கையை அகற்றுவதற்கு அவசியமேற்பட்டால் Booking Details பெட்டியில் வலது பக்கத்தின் மேலே இருக்கும் Delete My Booking எனும் சிவப்பு நிற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம். அகற்றிக் கொண்ட கோரிக்கை அமைப்பிலிருந்து அகற்றப்படுவதால் நீங்கள் ஒதுக்கிக் கொண்ட நேரத்தில் உங்கள் வாய்ப்பு இல்லாமற் போகும். அதனால் அது தொடர்பாக கவனத்திற் கொள்க.

காணொலி தொழிநுட்பத்தில் பார்வையிடுவதற்கான கோரிக்கையை விடுத்து அக்கோரிக்கை சிறைச்சாலைகள் நிறுவனத்தினால் அனுமதிக்கப்பட்டு Booking status என்பதில் Approved என குறிப்பிடப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் காணொலி அழைப்பு மற்றும் தொடர்புபடுவதற்கான லிங்க் கமரா குறியீட்டுடன் பக்கத்தின் மேலே Booking Details பெட்டியில் வலது பக்கமாகத் தோன்றும். இவ்வடையாளத்தில் க்ளிக் செய்வதால் உங்களுக்கு காணொலி அழைப்புடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

இக் குறிப்புக்கள் 5 வகைப்படும்.

Pending Approval
நீங்கள் கோரிக்கை சமர்ப்பித்த சந்தர்ப்பத்தில் இருப்பது இக் குறிப்பாகும்.உங்கள் பார்வையிடும் கோரிக்கை சிறைச்சாலைகள் நிறுவனத்தினால் கவனத்தில் கொள்ளப்படும் வரை இச் செய்தி தோன்றும்.இச் செய்தி தோன்றும் வரை உங்களுக்கு இவ்வமைப்பின் சேவை ஊடாக கைதியைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிட்டாது.
Approved
உங்கள் பார்வையிடுதலுக்கான கோரிக்கை சிறைச்சாலைகள் நிறுவனத்தினால் கவனத்தில் கொள்ளப்பட்டு அது அனுமதிக்கப்பட்டதன் பின் இச் செய்தி தோன்றும். இச் செய்தி தோன்றிய பின் மட்டுமே உங்களுக்கு இவ்வமைப்பின் சேவையூடாக கைதியைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டும்.
Canceled
உங்கள் பார்வையிடுவதற்கான கோரிக்கை சிறைச்சாலைகள் நிறுவனத்தினால் கவனத்திற் கொள்ளப்பட்டு ஏதேனுமொரு காரணத்திற்காக மறுக்கப்பட்டதன் பின் இச் செய்தி தோன்றும். இச் செய்தி தோன்றினால் உங்களுக்கு இவ்வமைப்பின் சேவை ஊடாக கைதியைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டாது.
Completed
உங்கள் பார்வையிடுவதற்கான கோரிக்கை சிறைச்சாலைகள் நிறுவனத்தினால் கவனத்தில் கொள்ளப்பட்டு அனுமதிக்கப்பட்டு குறித்த பார்வையிடும் நேரத்தில் நீங்கள் கைதியை வெற்றிகரமாக பார்வையிட்டதன் பின் இச் செய்தி தோன்றும். இது உங்கள் வாய்ப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததை குறிப்பிடுகிறது.
Expired
உங்கள் பார்வையிடுவதற்கான கோரிக்கை சிறைச்சாலைகள் நிறுவனத்தினால் கவனத்திற் கொள்ளப்பட்டு அனுமதிக்கப்பட்டாலும் குறித்த நேரத்தில் வருகை தராவிட்டால் ஏனைய எவ்வித காரணத்தினாலும் குறித்த பார்வையிடும் நேரத்தில் நீங்கள் கைதியை வெற்றிகரமாக பார்வையிடலை மேற்கொள்ளாத சந்தர்ப்பங்களில் இச் செய்தி தோன்றும். அப்படியானால் உங்கள் வாய்ப்பு தோல்வியடைந்தது அல்லது காலம் பிற்போடப்பட்டது என்பதையாகும்.

காணொலி அழைப்பினைப் பெற்றுக் கொள்வதற்காக உங்களுக்கு வலைக்கமராவொன்று மைக்ரோபோன் மற்றும் இணைய வசதியுடன் கூடிய கணினியொன்று அவசியமாகும். இவ் வலைக் கமராவில்,மைக்ரோபோனிள் தரம் மற்றும் இணைய வசதியின் வேகத்தில் காணொலி அழைப்பின் தரம் தீர்மானிக்கப்படும். கணினியொன்று இல்லாமற் கூட மேற்கூறப்பட்ட வசதி கொண்ட தொலைபேசியில் கூட எங்கள் காணொலி அழைப்பு சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.

காணொலி தொழிநுட்பத்தில் பார்வையிடுவதற்காக கோரிக்கை விடுத்திருக்கும் பார்வையாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் டோக்கன் இலக்கத்தைப் பயன்படுத்தி அமைப்பிற்குள் பிரவேசித்து காணொலி அழைப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். உங்கள் பார்வையிடுவதற்கான தகவல்கள் பக்கத்தில் மேல் வலது மூலையில் இருக்கும் காணொலி குறியீட்டினை க்ளிக் செய்வதால் காணொலி அழைப்பினை திறந்து கொள்ள முடியும். (இக் குறியீடு தோற்றமளிப்பது உங்கள் கோரிக்கை சிறைச்சாலைகள் நிறுவனத்தினால் அனுமதிக்கப்பட்டு Booking status என்பது Approved என குறிப்பிடப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே).

இக் காணொலி அழைப்பிற்காக தொழிநுட்ப உதவியை வழங்கியுள்ளது இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் (ICTA) இனால் என்பதோடு கொடுக்கப்பட்டிருக்கும் காணொலி அழைப்பு சேவைகளில் மட்டுமே காணொலி அழைப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.

உங்களுக்கு காணொலி அழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிட்டுவது உங்கள் பார்வையிடல் கோரிக்கை சிறைச்சாலைகள் நிறுவனத்தினால் கவனத்திற் கொள்ளப்பட்டு அனுமதிக்கப்பட்டதன் பின்னராகும்.

நீங்கள் காணொலி அழைப்பு மற்றும் தொடர்புகொள்வதற்கு குறித்த தினத்தில் குறித்த நேரத்தில் குறைந்தது 5 நிமிடங்களுக்கு முன்னராவது காணொலி அழைப்பை திறந்து கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். நீங்கள் அதன் போது அழைப்பிற்கு தொடர்புறும்(Participant) ஆவதோடு சிறைச்சாலைகள் நிறுவனம் தொடுப்பாளர்(Host) ஆகும்.

குறித்த நேரத்தில் சிறைச்சாலைகள் நிறுவனத்தினால் நீங்கள் அழைப்பிற்கு சம்பந்தப்படுத்துவதோடு உங்களுக்கு கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் அழைப்பிற்கென வழங்கப்படும். குறித்த நேரத்தில் நீங்கள் அழைப்பிற்கு சம்பந்தப்படாவிட்டால் அல்லது கொடுக்கப்பட்டிருக்கும் கால எல்லை பிந்தினால் உங்கள் காணொலி அழைப்புக் கோரிக்கை செல்லுபடியற்றதாகும்.

உங்கள் காணொலி அழைப்பு வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர் அல்லது அவ் ஒதுக்கிக் கொண்ட காலம் முடிவடைந்த பின்னர் உங்களுக்கு மீண்டும் அக் காணொலி லிங்க்(Link) ஊடாக அழைப்பினை மேற்கொள்ள முடியாது. அதற்கென மீண்டும் நேரமொன்றினை ஒதுக்கிக் கொண்டு கோரிக்கை விடுக்க வேண்டும்.